புளியநகர் கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா
புளியநகர் கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.;
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள புளியநகர் விஸ்வகுல பங்குதாரர்களுக்கு பாத்தியப்பட்ட கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவில் திருவிளக்கு பூஜை, சாஸ்தா பிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கற்குவேல் அய்யனாருக்கு அலங்கார தீபாரனை பூஜை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.