புகாா் பெட்டி

புகாா் பெட்டி

Update: 2022-07-10 21:39 GMT

குறைதீா்க்கும் கூட்டம் வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, பா்கூா், கடம்பூா் போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வனத்துறை சாா்பில் குறைதீா் கூட்டம் நடத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தாளவாடி.

வீணாகும் குடிநீர் 

கோபி டவுன் வாய்க்கால் ரோடு வீதியில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ரோட்டில் ஆறு போல் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் குழாய் அருகே கம்பி வலைக்குள் மின்மாற்றியும் உள்ளது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடைந்த குழாயை சரி செய்து பேராபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஸ்வம், கோபி.

ரோட்டை சீரமைப்பார்களா? 

கோபியில் சத்தியமங்கலம் ரோட்டில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதன் முன்புள்ள ரோடு ஜல்லிக் கற்கள் பெயர்ந்து தார் இல்லாமல் குழியாக உள்ளது. இது பகலில் தான் தொியும். ஆனால் இரவு நேரத்தில் தொியாது. இதனால் அந்த வழியாக வாகன ஒட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனா். சாய்ந்தபடி செல்லும் நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிாிழப்பு நிகழலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதன், கோபி.

பழுதான பள்ளி கட்டிடம்

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளிக்கட்டிடத்தை உடனே பராமரிக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

குவிந்துள்ள குப்பைகள்

கோபி நகராட்சி வாய்க்கால் ரோட்டில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

துா்நாற்றத்தால் அவதி 

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியில் ரோட்டு ஓரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் காற்று அடிக்கும் போது இந்த குப்பை தூசி பறந்து வீட்டுக்குள் வந்து விடுகிறது. எனவே குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளை அள்ள அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

சாக்கடை சாிசெய்யப்படுமா? 

ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகர் 3-வது வீதியில் சாக்கடை தடுப்புச்சுவர் உடைந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை தண்ணீா் ரோட்டில் ஓடுகிறது. மேலும் சாக்கடை தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லையும் அதிகளவில் காணப்படுகிறது. எனவே உடைந்த சாக்கடை தடுப்பு சுவரை சரிசெய்யவேண்டும்.

ரவி, ஈரோடு.


Tags:    

மேலும் செய்திகள்