திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை பூஜை
திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை பூஜை நடைபெற்றது.
நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அப்போது முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி, தேன் உள்ளிட்ட பல்வேறு வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இதில் திருமலைக்கேணி, அதிகாரிபட்டி, நத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் கோவிலுக்கு அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அங்குள்ள புனித தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடிவிட்டு, கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.