பாலக்கோடு:
பாலக்கோடு அருந்ததியர் தெருவில் ஊர் மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை மற்றும் வரலட்சுமி பூஜை செய்து வழிபட்டனர். மேலும் பெண்களின் மாங்கல்ய பாக்யம் நிலைக்கவும், குழந்தைகள் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.