சரக்கு வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி

கம்மாபுரம் அருகே சரக்கு வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-28 18:45 GMT

கம்மாபுரம்

விருத்தாசலம் பட்டிகுடிகாடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி மகன் அருண்பாண்டியன் (வயது 28), தொழிலாளி. இவருக்கும் ஒரத்தூரை சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே அருண்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் சென்றாா். அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் விரைந்து வந்து, பலியான அருண்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 40 நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்