புதுக்கோட்டை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்பு

புதுக்கோட்டை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்று கொண்டார்.;

Update: 2023-08-09 17:40 GMT

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மதியழகன். இவர் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தஞ்சாவூர் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பிரேமலதா புதுக்கோட்டைக்கு பணியிடம் மாற்றப்பட்டார். இவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் உயர் அதிகாரிகளை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்