புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகை

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை சி.ஐ.டி.யு.வினர் முற்றுகையிட்டனர்.

Update: 2023-08-18 18:58 GMT

புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) செயலாளர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.460, டிரைவருக்கு ரூ.547 சம்பளம் வழங்குவது, வருங்கால வைப்பு நிதி பிடித்ததற்கான விவர பட்டியலை தனி நபருக்கு வழங்குவது, ஞாயிறு, புதன் 2 நாட்களுக்கு ½ நாள் வாரவிடுப்பு வழங்குவது, தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமாக கொடுத்து மாதந்தோறும் ரூ.500 பிடித்தம் செய்வது உள்ளிட்ட உறுதிமொழி திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்ததாரர் சார்பில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்