புதுக்கோட்டை தொகுதி மீண்டும் உருவாகும்

2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக புதுக்கோட்டை தொகுதி மீண்டும் உருவாகும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.;

Update:2023-10-16 00:36 IST

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் செயல்படுகிறது என அண்ணாமலை கூறியது அர்த்தமற்றது. நாடு முழுவதும் மகளிருக்கான கொடுமைகளை களைவதற்காக மகளிர் உரிமை மாநாட்டை தி.மு.க. நடத்தியுள்ளது. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. கட்சியை விரட்டிவிட்டவர் அண்ணாமலை. இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் புலம்பி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பெறுவதற்காக கூட்டு முயற்சியுடன் செயல்பட சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரை புதிதாக நியமிப்பதில் யாராக இருந்தாலும் வரவேற்கக்கூடியது தான். தொகுதி மறு சீரமைப்பில் புதுக்கோட்டை எம்.பி. தொகுதி பறிபோனது. அடுத்த மறு சீரமைப்பு வருகிற 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வரும். அப்போது தொகுதிகள் மாறும். இதில் சீரமைப்பு குழுவில் புதுக்கோட்டை எம்.பி. தொகுதி மீண்டும் வர கோரிக்கை வைத்து வலியுறுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், மாவட்ட தலைநகரத்துடன் இருப்பதால் தொகுதி மீண்டும் வரும். நான் மீண்டும் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை முடிவு செய்யும்'' என்றார். முன்னதாக அரசு மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அவர் தொடங்கி வைத்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்