புதுக்குளம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்

புதுக்குளம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்பட்டது.;

Update: 2023-06-29 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில், புதுக்குளத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், சங்கரன்குடியிருப்பில் சட்டபேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிளை நூலக கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, யூனியன் ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன் வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

இதில் ஊராட்சி துணைத் தலைவர் முருகன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதுக்குளம் ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்