மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி முதல் இடம்

விழுப்புரத்தில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Update: 2022-07-04 16:16 GMT


விழுப்புரம்,

விழுப்புரம் ரெயில்வே காலனியில் உள்ள மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 2 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் விழுப்புரம், சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மொத்தம் 24 அணியினர் கலந்துகொண்டு விளையாடினர்.

இதில் புதுச்சேரி குப்புராஜ் கால்பந்தாட்ட கழக அணி முதல் இடத்தையும், விழுப்புரம் கால்பந்தாட்ட கழக ஏ அணி 2-ம் இடத்தையும், ஈரோடு ஸ்பார்ட்டன்ஸ் கால்பந்தாட்ட கழக அணி 3-ம் இடத்தையும், விழுப்புரம் கால்பந்தாட்ட கழக பி அணி 4-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இயன்றதை செய்வோம் குழுவின் நிறுவனர் நத்தர்ஷா, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க தலைவர் பழனிவேல் ஆகியோர் பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்