புதுச்சேரி சபாநாயகர் சாமி தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் புதுச்சேரி சபாநாயகர் சாமி தரிசனம் செய்தார்

Update: 2023-04-27 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் புதுச்சேரி மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நேற்றி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள் மற்றும் தேவார பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகளை பார்வையிட்டார். அப்போது தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னதாக புதுச்சேரி சபாநாயகர் தருமபுரம் ஆதீன குருமகாசன்னிதானத்திடம் அருளாசி பெற்றார். அப்போது குரு மகா சன்னிதானம் சீர்காழி கோவில் குடமுழுக்கு பத்திரிகையை சபாநாயகருக்கு வழங்கினார். பின்னர் புதுச்சேரி மாநில சபாநாயகர் நிருபர்களிடம் கூறுகையில் பூமிக்கு அடியில் கிடைக்கும் அனைத்து தொல்லியல் பொருட்களும் மத்திய அரசுக்கு உட்பட்டது. இங்கு கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகளை தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். அப்போது பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அகோரம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்