சாலை விபத்தில் புதுச்சேரி கட்டிட மேற்பார்வையாளர் பலி

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் புதுச்சேரி கட்டிட மேற்பார்வையாளர் பலி;

Update: 2022-09-20 18:45 GMT

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி(வயது 40). கட்டிட மேற்பார்வையாளரான இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டியில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை நோக்கி சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் அருகே ஏ.கே.குச்சிப்பாளையம் மலட்டாறு பாலம் அருகில் வந்தபோது அதே திசையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயத்துடன் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பார்த்தசாரதி சிகிச்சை பபலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்