முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் விழா
திமிரியில் முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அம்பேத்கர் வீதியில் உள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தனர். மதியம் கூழ் வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் முத்துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு, வாண வேடிக்கை, செண்டை மேளத்துடன் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.