நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விதிமுறைகள் வெளியீடு - தமிழக அரசு

நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2022-12-05 13:19 GMT

சென்னை,

கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை திருவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

இதில் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள 'நம்ம ஊரு திருவிழா'வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்

ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்க கூடாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. காஞ்சி, சேலம், தஞ்சை, மதுரை, நெல்லை, கோவை மண்டலா கலை பண்பாட்டு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்