மக்கள் நல பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

மக்கள் நல பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-28 19:08 GMT

முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிதள பணியாளர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மனோகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபிநாத், தனபால் ராஜ், முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிதள மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பதிவேடுகள் பராமரித்தல் முறை, ரூ. 294 ஊதியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய வேலை அளவுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஐயப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்