கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தினர்

எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-18 16:51 GMT

புதிய பஸ் நிலையம்

கடலூர் அருகே எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரியும், கடலூர் சட்டமன்ற தொகுதி மைய பகுதியில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். தற்போது உள்ள பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை அறிய மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், குடியிருப்போர் சங்கம் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்

இது பற்றி அறிந்ததும் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கட்சியினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று காலை அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்திற்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மாநில துணைத்தலைவர் வக்கீல் சந்திரசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மண்டல பொறுப்பாளர் ரங்கமணி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் குளோப், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமார்பன், நகர செயலாளர் செந்தில், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ரகுபதி, குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருதவாணன், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொதுநல அமைப்பு தலைவர் குமார், கடலூர் மாநகர பொதுநல அமைப்பு தலைவர் ரவி, மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ரஹீம், மனிதநேய ஜனநாயக கட்சி மன்சூர், மக்கள் அதிகாரம் பாலு, மீனவர் விடுதலை வேங்கை வெங்கடேசன், தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் குரு ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அடுத்த கட்டமாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந்தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்