கோவில்பட்டியில் இருளில் மூழ்கிய எட்டயபுரம் சாலையால் பொதுமக்கள் அவதி

கோவில்பட்டியில் இருளில் மூழ்கிய எட்டயபுரம் சாலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2023-10-13 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் எட்டயபுரம் இரு வழி சாலையில் உள்ள மின் விளக்குகள் கடந்த 2 நாட்களாக எரியவில்லை. இந்த சாலை மார்க்கமாக விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமநாதபுரம் செல்லும் பஸ்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பீதியுடன் நடமாடும் நிலை உள்ளது. விபத்து அபாயமும் நீடிக்கிறது. எனவே இந்த சாலையில் மின்விளக்குகளை எரிய விடுவதற்கு நகராட்சி நிர்வாகமும். காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்