டிரான்ஸ்பார்மர்கள் பழுதானதால் பொதுமக்கள் அவதி

நாமக்கல்லில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் டிரான்ஸ்பார்மர்கள் பழுதானதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-10-19 18:57 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு நாமக்கல் சந்தைபேட்டைபுதூர் மற்றும் திருச்சி சாலையில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது.

அதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 2 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து பழுதாகின. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து சம்பந்தப்பட்ட டிரான்ஸ்பார்மர்களில், மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் சந்தைபேட்டைபுதுாரில், 3 மணி நேரத்துக்கு பின்பு மாலை 5 மணிக்கு, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், திருச்சி சாலையில் பழுது சரி செய்யும் பணி இரவு 7 மணிக்கு மேலும் நீடித்தது. மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் கடும் அவதிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்