கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-02 17:46 GMT

அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொன்னுகுடி கிராமத்தில் கடந்த 25-ந் தேதி மாதாகோவில் திருவிழாவில் சப்பர ஊர்வலத்தின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை கலெக்டரை சந்தித்து மனுகொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். அங்கு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் இல்லாத நிலையில் அதற்கு அடுத்தகட்ட நிலையில் இருந்த அதிகாரிகளை சந்திந்து மனுகொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.ஆனால் அதிகாரிகள் மனுவை வாங்காமல் அலைகழித்ததாக கூறி பொதுமக்கள், வக்கீல் சங்கமித்திரன் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து மனுக்களை பெற்றுகொண்டு சென்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பரிமளா என்பவர் கூறுகையில், மாதாகோயில் திருவிழாவில் சப்பர ஊர்வலத்தில் நடந்த பிரச்சினை குறித்து செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து நாங்கள் ஊருக்கு சென்றபோது எங்கள் குடும்பத்தினரை ஊருக்குள் விடாமல் தடுத்து பிரச்சினை செய்கின்றனர்.இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுகொடுத்துள்ளோம் என்றார். கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மனு வாங்க மறுத்ததால் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்