மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை
குற்றாலம் அருகே மழை வேண்டி பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.;
குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களும் மழை அதிகமாக காணப்படும். ஆனால் இந்த முறை போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்வதற்கு, நீரும் இல்லாமல் விவசாயிகளும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பருவமழை நல்லமுறையில் பெய்திட பழைய குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோவிலில் மத்தளம்பாறை ஊர் பொதுமக்கள் 408 படையல் செய்து அதனை கோவிலுக்கு எதிர் திசையில் உள்ள பாறையில் வாழைகளை விரித்து அதில் படையலை வைத்து பூஜை செய்தனர். சுவாமிக்கு பால்குடம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை, அன்னதானமும் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.