பொதுமக்கள் சாலை மறியல்

மோகனூர் அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-12 18:45 GMT

மோகனூர்

சாலை மறியல்

மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் உள்ளது. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, சென்னாக்கல்புதூர் பொதுமக்கள் நேற்று காலை வண்டிக்கேட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மோகனூர்-பரமத்திவேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தடையின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குடிநீர் வழங்கப்படும்

இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர் இந்துமதி சின்னத்தம்பி கூறும்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதாலும், மோட்டார் அறை அருகே மணல் குவிந்துள்ளதால் தண்ணீர் வருவதில்லை. மேலும் மோட்டாரும் பழுதாகிவிட்டது. இதையடுத்து மோட்டார் சரி செய்யப்பட்டது. தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் மணலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்