பொதுமக்கள் சாலை மறியல்

சோழவந்தான் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-03 21:21 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் சம்பவத்தன்று ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மது போதையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சிந்தாமணி அம்மாள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சிந்தாமணி அம்மாள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இது ெதாடர்பாக சேகர், அவரது மனைவி சித்ரா, அவரது மகன் தமிழ்வருவன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரியும், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிந்தாமணி அம்மாளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரியும், விக்கிரமங்கலத்தில் நேற்று காலை பொதுக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன், விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விக்கிரமங்கலம் கலியுகநாதன், காடுபட்டி ஆனந்தன் முதலைக்குளம் பூங்கொடிபாண்டி, எட்டூர் கமிட்டி நிர்வாகி ஜெயபாலன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சமாதானம் அடைந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்