ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணி அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-06 11:38 GMT

ஆரணி

ஆரணி அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராட்டினமங்கலம் கூட்டுரோடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள விரிவாக்க பகுதி உள்ளது.

அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அங்குள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் வழிந்தோடுகிறது. தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்ைல.

இந்தநிலையில் அந்த பகுதி பொதுமக்கள் பலர் திரண்டு வந்து ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு ஆகிய வசதிகளை ெசய்துதர வேண்டும் என வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இடத்தை எழுதிதர வேண்டும்

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரிவாக்க பகுதியில் சாலைைய சீர் செய்ய ேவண்டும் என்றால், மனையை அமைத்தவர்கள் சாலைக்காக ஒதுக்கிய இடத்தை ஊராட்சிக்கு எழுதிதர வேண்டும். அப்போது தான் அங்கு சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி ெசய்ய முடியும், என்றனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்