சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

சிங்கம்பாறையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-09-02 18:46 GMT

முக்கூடல்:

முக்கூடல் பேரூராட்சி சிங்கம்பாறையில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி, அப்பகுதி மக்கள் நேற்று அங்குள்ள திருமண மண்டபம் அருகில் காலிக்குடங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. நகர செயலாளர் வில்சன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் நின்று, குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முக்கூடல் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்