திருமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-28 20:54 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் சிவராமன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் உதவியுடன் சென்றனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்ற சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

மேலும், ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்எண்ெணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி அவரை குண்டுகட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நடவடிக்கை தேவை

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, நாங்கள் 50 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். வீட்டிற்கு பட்டா கொடுக்காமல், ஒரு தனி நபர் கொடுத்த புகாருக்காக வீட்டை இடிக்கின்றனர். வீட்டை இடித்து போட்டால் நாங்கள் எங்கே குடியேறுவது, ஊரில் எல்லோருக்கும் பட்டா கொடுத்துள்ளனர். ஆனால் எங்களுக்கு கொடுக்கவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த வருவாய் துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வருவாய்த்துறையினர் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்