மினி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மினி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Update: 2023-02-16 18:45 GMT

திங்கள்சந்தை:

திங்கள்நகர் பஸ்நிலையத்தில் இருந்து தக்கலை செல்லும் மினிபஸ் ஒன்று அவர்களுக்கு ஒதுக்கபட்ட தடம் வழியாக இயங்கி வருகிறது. இந்த மினிபஸ் திங்கள்நகர், கருங்கல் ரோடு, கிறிஸ்மஸ் தெரு, பால் தெரு, நெய்யூர் மருத்துவமனை வழியாக தக்கலை செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலையில் பால் தெரு, கிறிஸ்மஸ் தெரு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ் துணை தலைவர் ராப்சன் நவீன்தாஸ், தக்கலை ஒன்றிய யூனியன் கவுன்சிலர் கோல்டன் மெல்பா ஆகியோருடன் ஊர் பொதுமக்கள் திரண்டு திடீரென மினி பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இது மிகவும் குறுகலான சாலையையொட்டி புறமும் வீடுகள் உள்ளதால் மினி பஸ்சால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இதுபற்றி கலெக்டருக்கு தபால் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இரணியல் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரகுமார், ஜோதி தனிஸ்லாஸ் ஆகியோர் பொதுமக்களிடமும், மினிபஸ் உரிமையாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு மினிபஸ் இந்த தடத்தில் இயக்கப்படாது என உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்