ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-07 19:46 GMT

திருச்சி முடுக்குப்பட்டியில் சுமார் 120 குடும்பத்தினர் பல வருட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று திருச்சி ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பதால் அதனை காலி செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நோட்டீஸ் ஒட்ட வந்த ரெயில்வே அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து நேற்று முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த பல வருட காலமாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடம் தமிழக அரசு இடமாகும். ஆனால் ரெயில்வே நிர்வாகம் எங்கள் வீடுகளை காலி செய்யும்படி கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்