புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தூசி அருகே புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-03-27 16:47 GMT

தூச

வெம்பாக்கம் தாலுகா நமண்டி ஊராட்சி தூசி அருகே வடமாவந்தல் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் மற்றும் விழுப்புரம் கனிம வளத்துறை ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினர்.

அதனைத்தொடர்ந்து வெம்பாக்கம் - காஞ்சீபுரம் சாலையில் நமண்டி கூட்டு சாலை அருகே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துக் கொண்டு கல்குவாரி அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பேசினர்.

மேலும் இப்பகுதியில் புதிதாக கல்குவாரி அமைந்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனைகள், கல்வி நிலையங்கள், ஆகியவற்றின் சுற்றுசூழல் மற்றும் நிலத்தடி நீர், விவசாயம் ஆகியன பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கூறினர்.

இதில் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் நேமிநாதன், மாவட்ட துணைச் செயலாளர் நரசிம்மன், கிளை செயலாளர் கார்த்திகேயன், சிறுபான்மை மாவட்ட துணை செயலாளர் அல்லாபகஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்