குன்னூரில் கோவில் மரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

குன்னூரில் கோவில் மரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

Update: 2022-08-25 12:33 GMT

குன்னூர்

குன்னூரில் சந்திராகாலனி குயிருப்பு பகுதி உள்ளது. இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த, முனீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அருகில நாவல் மரம் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நாவல் பழ மர கிளைகளை சிலர் வெட்டினர். இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் மரத்தின் கிளைகளை வெட்ட கூடாது என்று தடுத்து நிறுத்தினர். இந்தநிலையில் மீண்டும் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிலர் அந்த நாவல் மரத்தின் கிளையை வெட்டினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஒன்று திரண்டு மரத்தின் கிளைகளை வெட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடந்து அங்கு வந்த குன்னூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவ்ராஜ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையில் கோவில் மரத்தின் கிளைகளை வெட்ட தற்காலிகமாக தடை விதித்தனர். இதனைதொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்