காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

வடசேரி-திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-14 19:18 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மேலபண்ணைகளம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு போர்வெல் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் வடசேரி-திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்