மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கம்பத்தில் மின்கம்பம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-07-23 21:00 GMT

கம்பம் 20-வது வார்டு பகுதியான சங்கரலிங்கம்பிள்ளை தெரு, படிப்பகம் சந்தில் நேற்று முன்தினம் மின்வாரிய ஊழியர்கள் குழிதோண்டினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், எதற்காக குழிதோண்டுகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது இந்த சந்தில் மின்கம்பம் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது படிப்பகம் சந்து மிகவும் குறுகலானது. தற்போது மின்கம்பம் அமைத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதேபோல் படிப்பக சந்தின் ஆரம்பத்திலும், கடைசியிலும் மின்கம்பங்கள் உள்ளன. அவற்றின் மூலம் இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் எதற்காக மின்கம்பம் அமைக்கப்பட உள்ளது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பம் அமைக்க தோண்டப்பட்ட குழியை மூடிவிட்டு சென்றனர்.

இதற்கிடையே படிப்பக சந்து பகுதி மக்கள், குறுகலான சந்தில் மின்கம்பம் அமைக்க கூடாது என முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்