இறால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டை அருகே இறால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்.

Update: 2023-03-30 20:33 GMT

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னாண்டிக்குப்பம் கிராமத்தில் தனிநபர் ஒருவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் இறால் பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அந்த பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இதுபோன்று விவசாய நிலத்தில் இறால் பண்ணை வைத்தால் நிலத்தடி நீர் மாசடையும். இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இங்கு இறால் பண்ணை அமைக்கக்கடாது என கூறி கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த ஏ.எஸ்.பி. ரகுபதி, இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இறால் பண்ணை பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவி்த்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்