கும்மிடிப்பூண்டி அருகே ரூ.353 கோடியில் அமையவுள்ள மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.353 கோடியில் அமையவுள்ள மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-08-24 14:00 GMT

ரூ.353 கோடியில் தொழிற்பூங்கா

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள மாநெல்லூர் மற்றும் சூரப்பூண்டி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட 692 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் சுமார் ரூ.353 கோடியில் மாநெல்லூர் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது. இந்த தொழிற்பூங்காவிற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில், மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் முன்னிலை வகித்தார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

அப்போது சுற்றுச்சூழல் அறிக்கை விவரங்கள் திரையில் காண்பிக்கப்பட்டு திட்டம் குறித்து பெதுமக்கள் மத்தியில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு பொதுமக்கள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநெல்லூர் ஊராட்சியில் பொதுமக்களின் சார்பில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் புறக்கணிக்கப்பட்டதாவும், விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை பாதிக்கும் சிப்காட் தொழிற்பூங்காவை அனுமதிக்க கூடாது எனவும் மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் பொதுமக்கள் சார்பாக தெரிவித்தார்.

வாழ்வாதாரம் பாதிக்கும்

அதேபோல சூரப்பூண்டி ஊராட்சி தலைவர் வாணி ஸ்ரீ பாலசுப்பிரமணியனும் பொதுமக்கள் சார்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொழிற்பூங்கா அமைக்கப்பட்டால் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் கருத்து முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பேசிய மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், அனைவரது கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு உள்தாகவும், அவற்றை அரசின் கவனத்திற்கு கெண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்