தொழிலாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்
தொழிலாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
தோகைமலையில் தமிழ்நாடு பொதுத் தொழிலாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் பொது செயலாளர் உருசுலாநாதன், பொருளாளர் புனிதவதி, கரூர் மாவட்ட விவசாய சங்கத்தின் செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும், விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ெரயில்வே, விமானம், ஆயுள் காப்பீடு நிறுவனம் போன்றவற்றை தனியார் மயப்படுத்தும் போக்குகளை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டம் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.