வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாபட்டினத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் தி.மு.க. அரசி்ன் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலர் சதாசிவம் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் கவுதமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நாகராஜன் பேசினார். இதில் ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மோகனா தசமணி, மாவட்ட கவுன்சிலர் சோழன் மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.