சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டம்
செண்பகவல்லி அணை கால்வாய் தடுப்புச்சுவரை சீரமைக்க கோரி சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டம்
அச்சன்புதூர்:
வாசுதேவநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி தடுப்பணையானது தென் மாவட்டங்களின் குடிநீர், பாசனத்துக்கு ஆதாரமாக விளங்கியது. இந்த நிலையில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் செண்பகவல்லி அணை கால்வாய் தடுப்புச்சுவர் சேதமடைந்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் கேரள மாநிலத்துக்கு செல்கிறது. எனவே சேதமடைந்த செண்பகவல்லி அணை கால்வாயை உடனே சீரமைக்க வலியுறுத்தி, செண்பகவல்லி அணை உரிமை மீட்பு குழு சார்பில், சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. .