பொதுசுகாதாரத்துறை நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகள் கலெக்டர் தொடங்கி வைத்தார்

பொதுசுகாதாரத்துறை நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிககளை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2022-10-07 18:45 GMT

வாணியம்பாடி

பொதுசுகாதாரத்துறை நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிககளை கலெக்டர் தொடங்கி வைத்தார்

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் கூறுகையில், ''பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை 1922-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது நூற்றாண்டைத் தொட்டு வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றாண்டு கொண்டாட்டங்களை பொது சுகாதாரத் துறை நடத்தி வருகிறது.

மேலும் வருகின்ற 10-ந் தேதி சென்னையில் தொடங்கி நூற்றாண்டு ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு செல்லப்பட்டு கொண்டாடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி பொது சுகாதாரத்துறைதிருப்பத்தூர் மாவட்டத்தை அக்டோபர் 19-ந் தேதி வந்தடைந்து அதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன'' என்றார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் செந்தில், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள். பசுபதி, மீனாட்சி, சௌந்தாய், தீபா, செல்லமுத்து, மாவட்ட ஊராட்சிக்கு குழு உறுப்பினர் சிந்துஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் உமா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

===========

Tags:    

மேலும் செய்திகள்