பொது சுகாதார முகாம்

பொது சுகாதார முகாம் நடைபெற்றது

Update: 2022-09-02 21:43 GMT

இட்டமொழி:

பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் 'நம்ம ஊரு சூப்பரு' பொது சுகாதார முகாம் நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் முகாமை தொடங்கி வைத்தார். நாங்குநேரி யூனியன் ஆணையாளர் கிஷோர்குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் திட்ட விளக்க உரையாற்றினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் பாபு செல்வன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஜி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் முருகன் நன்றி கூறினார். பின்னர் இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், பரப்பாடி குழந்தைகள் மையத்தில் நடந்த தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்