வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் - டிஜிபி உத்தரவு
பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு பெறவேண்டும் எனவும் , பொதுமக்களின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவிவுறுத்தியுள்ளார்.