விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 578 மனுக்கள் பெறப்பட்டன

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 578 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-05-08 18:45 GMT


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 578 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறந்த ரேஷன் கடை பணியாளர்களான திருவெண்ணெய்நல்லூர் சங்கருக்கு ரூ.4 ஆயிரமும், மேல்மலையனூர் சம்பத்துக்கு ரூ.3 ஆயிரமும், எடையாளராக தேர்வு செய்யப்பட்ட விழுப்புரம் நவீனாவுக்கு ரூ.3 ஆயிரத்துக்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்