கடலூரில்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது

கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.

Update: 2023-02-06 18:45 GMT


கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 313 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்