பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. முகாமில் கருத்து கேட்டுப்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 9 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்களிடம் நேரடியாக பெற்றுக்கொண்டார்கள்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.