விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்நாளை மறுநாள் நடக்கிறது
விழுப்புரம் மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட கோட்ட அலுவலகத்தில் மாதாந்திர குறைகேட்பு நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சிவகுரு தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக எழுதிக்கொடுத்து பயன்பெறலாம். இந்த தகவல் மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.