சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து நடைபெற்றது.

Update: 2023-08-16 18:45 GMT

சங்கரன்கோவில்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக விருந்தில் பங்கேற்ற ஆண்கள் பெண்களுக்கு அறநிலையத்துறை சார்பில் சேலை மற்றும் வேஷ்டிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரன், நகர அவை தலைவர் முப்பிடாதி, தலைவன் கோட்டை கூட்டுறவு சங்க தலைவர் விஜய பாண்டியன், நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, வீரா, நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் அஜய்மகேஷ்குமார், சங்கர்கணேஷ், வழக்கறிஞர் ஜெயக்குமார் மற்றும் கோவில் மேற்பார்வையாளர் முத்துராஜ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்