கும்பகோணம் கோவில்களில் பொது விருந்து

கும்பகோணம் கோவில்களில் பொது விருந்து

Update: 2022-08-15 20:24 GMT

கும்பகோணம்

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் பொது விருந்து நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் கல்யாணசுந்தரம் எம்.பி., மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். தொடர்ந்து கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் மண்டலக்குழு தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்‌. மாவட்ட நிர்வாகம் சார்பில் கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமம் சிமிலிமேடு பகுதியில் பொது விருந்து நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, தாசில்தார் தங்கபிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கிராமமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்