ரேஷன் கடையில் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சம்

ரேஷன் கடையில் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Update: 2023-02-14 19:53 GMT

இலுப்பூர் அருகே வெட்டுக்காடு ஊராட்சி போலம்பட்டியில் ேரஷன் கடை செயல்பட்டு வருகிறது. போலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ரேஷன்கடையில் நேற்று இலவச அரிசி வழங்கப்பட்டது. அரிசியை பொதுமக்கள் வாங்கிசென்று பார்த்தபோது அரிசியில் மற்றொரு அரிசியைபோல் ஏதோ பொருள் கலந்திருப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து ரேஷன் கடையில் வாங்கிய அரிசியை மீண்டும் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் கொண்டு காண்பித்து இதுகுறித்து கேட்டுள்ளனர். பின்னர் ஊழியர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ், உள்ளிட்டோர் விரைந்து வந்து அரிசிகளை பார்வையிட்டு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் இது பள்ளிகளுக்கு வழங்கப்படுபவை என்றும் பொதுமக்களிடம் எடுத்துகூறி அதன் நன்மைகளை விளக்கி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்