பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாலியில் சேதமடைந்துள்ள சமுதாயகூட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-10-02 00:15 IST

திருவாலியில் சேதமடைந்துள்ள சமுதாயகூட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமுதாய கூடம்

திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அதிக அளவில் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இதனால் இங்கு விவசாய கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் குடும்ப திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளாட்சி துறை சார்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.

இந்த சமுதாய கூடத்தில் திருவாலி மட்டுமல்லாமல் புதுத்துறை, காவலம்பாடி, மண்டபம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். நிகழ்ச்சிகளை நடத்திட செலவு குறைவாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் இந்த சமுதாயகூடத்தை பயன்படுத்தி வந்தனர்.

சிமெண்டு கிடங்கு மூடப்பட்டது

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாய கூடம் பழுதடைந்ததால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சமுதாய கூடத்தின் ஒரு அறையில் சிமெண்டு கிடங்கு இயங்கி வந்தது. சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளின் வீடு கட்டும் திட்டம், சிமெண்டு சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு சிமெண்டு இந்த கிடங்கு மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த சமுதாயகூடம் முற்றிலும் சேதம் அடைந்ததால் சிமெண்டு கிடங்கும் மூடப்பட்டது. இதனால் இந்த ஊராட்சி பொதுமக்கள் சமுதாயகூடம் இல்லாத காரணத்தால் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் வேதனையில் உள்ளனர். எனவே பழுதடைந்த சமுதாயகூட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடிக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த திருமாறன் கூறுகையில், இந்த சமுதாயகூடத்தால் பொதுமக்கள் அதிக அளவில் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த சமுதாய கூடம் மிகவும் சிதிலமடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இந்த பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. எனவே இந்த இடத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, பெரிய அளவிலான சமுதாய கூடம் மற்றும் சிமெண்டு கிடங்கு அமைத்திட சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்