பொதுமக்கள், ஆடுகளை கடிக்கும் நாய்கள்
கீழ்வேளூர் பேரூராட்சியில் பொதுமக்கள், ஆடுகளை நாய்கள் கடித்து வருகின்றன. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பேரூராட்சியில் பொதுமக்கள், ஆடுகளை நாய்கள் கடித்து வருகின்றன. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 பேர் காயம்
கீழ்வேளூர் பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் வெள்ளந்திடல், பிள்ளை தெருவாசல் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் 10-க்கு மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சென்று வயல்வெளியில் மேய்ச்சலுக்காக வரும் ஆடுகளை கடித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் 5 ஆடுகளை நாய்கள் கடித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்துள்ளது. இதில் காயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் உள்ள நாய்கள் ஆடுகள், பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆடுகள், பொதுமக்களை கடித்து வரும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.