பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் - நாளை நடைபெறுகிறது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-06-10 12:12 GMT

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, காஞ்சீபுரம் வட்டத்தில் நரப்பாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் அகஸ்தியப்பா நகர் (பெருநகர்), வாலாஜாபாத் வட்டத்தில் தென்னேரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் கொளத்தூர், குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய அட்டை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். அவற்றின் மீது உடனடி தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்கள் புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்