பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.